ராணிப்பேட்டையில் வாகனங்கள் ஏலம் எவ்வளவு தெரியுமா?
ரூ.5½ லட்சத்துக்கு ஏலம் போன வாகனங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமை தாங்கினார்.இதில் பொதுமக்கள், வியாபாரிகள் என பலர் தங்களது ஆதார் அட்டை மற்றும் ரூ.100 நுழைவு கட்டணமாக செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர். முடிவில் 31 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மூன்றுசக்கர வாகனம் என 32 வாகனங்கள் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 160-க்கு ஏலம் போனது.