கடம்பூரில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது

கடம்பூரில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது

Update: 2025-01-01 03:57 GMT
கடம்பூரில் கஞ்சா விற்பனை ஒருவர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள இருட்டிபாளையம் பஸ் டாப் அருகே கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவை மாவட்டம் காரமடை மங்களகரைப்புதூரை சேர்ந்த பத்ரி கவுடர் என்பவரது மகன் நாகராஜ் (38) என்பதும், அவர் சட்டை பையில் விற்பனைக்காக 10 கிராம் அளவுள்ள கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த கடம்பூர் போலீசார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

Similar News