ஆசனூர் மலைப் பகுதி ஏராளமான மோட்டல், ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளில்
ஆசனூர் மலைப் பகுதி ஏராளமான மோட்டல், ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளில்
ஆசனூர் மலைப் பகுதி ஏராளமான மோட்டல், ஹோட்டல் மற்றும் பேக்கரி கடைகளில் உள்ளன. இங்கு விற்கப்படும் உணவுப் பொருள்கள் , காலாவதியான மற்றும் கலப்பட உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆசனூர் பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . கடைகளில் சுகாதாரமில்லாமல் உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்த ஒரு உணவகத்திற்கு 2000 ரூபாய் அபராதமும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் 4000 ரூபாய் அபராதமும், டீ தயாரிப்பதற்காக வைத்திருந்த கலப்பட டீ தூள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்த டீ தூளை கீழே கொட்டி அழிக்கப்பட்டது. டீ கடைக்ககாரருக்கு 1000 ரூபாய் அபராதமும் ஆக மொத்தம் 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சூடான சாம்பார், ரசம்,குழம்பு போன்றவற்றை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்து கொடுக்கக் கூடாது. அஜினோமோட்டோ மற்றும் செயற்கை வண்ணக் பொடிகள் பயன்படுத்தக் கூடாது. உரிமம் இல்லாத கடைகள் உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.