சூலூர்: பெண்கள் கபாடி சேம்பியன்ஷிப் போட்டி !
கோவை மாவட்டம் சூலூரில் தெற்கு ஒன்றிய அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக கபாடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.;
கோவை மாவட்டம்,சூலூர் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக நடத்தும் கோவை மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பெண்கள் கபாடி சேம்பியன்ஷிப் போட்டி சூலூரில் நேற்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சூலூர் ரா.சிவசங்கர் ஏற்பாட்டில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி தலைமை தாங்கி கபடி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரவேல், கந்தவேல்,பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகை வேலன்,அவைத் தலைவர் ஏ.பி.அங்கணன், ஒன்றிய துணைத் தலைவர் அங்கமுத்து, வழக்கறிஞர் பிரிவு பிரபுராம்,மற்றும் நகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக, S.V ரங்கராஜ் நினைவாக பரிசு தொகையும், கேடயமும், இரண்டாம் பரிசாக கலைவாணி அவர்களின் நினைவாக ரொக்க பரிசும்,கேடயமும், மூன்றாம் பரிசாக k.n கந்தசாமி அவர்களின் நினைவாக ரொக்க பரிசும்,கேடயமும் வழங்கப்பட்டது.