அதிமுக மற்றும் திமுகவினர் ஒட்டிக் கொள்ளும் போஸ்டர்களால் பொதுமக்கள் அதிருப்தி !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கட்சியினர் மாறி மாறி போஸ்டர் ஒட்டிக் கொள்கின்றனர்.;

Update: 2025-01-01 06:23 GMT
அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது நிலையில் இதனிடையே அ.தி.மு.க வினர் 'யார் அந்த சார்?' என போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் இதற்கு திமுகவினர் நேற்று மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணி வை மூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது,#savegirls education என்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுக திமுக என மாறி மாறி கோவையில் போஸ்டர்கள் ஒட்டிக்கொள்வதால் கோவையில் மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Similar News