விருதுநகரில் புத்தாண்டை வாணவேடிக்கையுடன் வரவேற்ற மாவட்ட நிர்வாகம்....*

விருதுநகரில் புத்தாண்டை வாணவேடிக்கையுடன் வரவேற்ற மாவட்ட நிர்வாகம்....*;

Update: 2025-01-01 09:11 GMT
2025 வது ஆண்டு புத்தாண்டை விருதுநகர் மாவட்டமானது,குட்டி ஜப்பானை, (சிவகாசியை) பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும் பட்டாசு வாணவேடிக்கையுடன் வரவேற்றது.. விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும், பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும், செவ்வாயன்று இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் வரவேற்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. விருதுநகர் , மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,இந்த வாண வேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில், சிவகாசி சோனி பயர் ஒர்க்ஸ் மற்றும் அணில் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் இந்த வாணவேடிக்கை நிகழ்வை நடத்தினர். வாண வேடிக்கை நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில் விருதுநகரைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் வாணவேடிக்கையை பார்த்து ரசித்தனர்.

Similar News