சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்றது
*அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பள்ளி மாணவ மாணவியர்களின் பரத நடன நிகழ்ச்சிகள் மற்றும் கண்ணை கவரும் சிவதாண்டவம் உள்ளிட்ட பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் பக்தி கீர்த்தனைகள் பாட சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு கோவில் முழுவதும் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்தப் புத்தாண்டு சிறப்பு ஆரத்தி விழாவில் அருப்புக்கோட்டை பந்தல்குடி, வாழ்வாங்கி, செட்டிகுறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் பக்தி கீர்த்தனைகளை பாடி சாய்பாபாவின் அருளை பெற்று சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.