ஊராட்சி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஊராட்சி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2025-01-01 10:49 GMT
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம்பட்டி ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பாளையம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையம்பட்டி ஊராட்சி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.‌ இதனை தொடர்ந்து இன்று பாளையம்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் பாளையம்பட்டி ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைத்து தெரிவித்து ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க அமைப்பினர், கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் என்ன பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாளையம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் வரி உயரும் எனவும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இழக்கக்கூடும் எனவும் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இதை தடுத்து நிறுத்த முடியும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த இயக்கத்திற்கு பாளையம்பட்டி ஊராட்சி மக்கள் பாதுகாப்பு இயக்கம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும் பாளையம்பட்டி ஊராட்சியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News