கூம்பு வடிவம் மற்றும் கைரேகை பதிவான அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
கூம்பு வடிவம் மற்றும் கைரேகை பதிவான அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் கைரேகை பதிவான அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.... வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.அகழாய்வில் இதுவரை தங்க நாணயம்,செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை,சதுரங்க ஆட்ட காய்கள்,கண்ணாடி மணிகள்,வட்ட சில்லு,சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடு மண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்ட்டுள்ளது. குறிப்பாக அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில் தயரித்தவர்களின் கைரேகை பதிவாகியுள்ளதால் ஆச்சரியமடைந்துள்ள தொல்லியல் துறையினர் கைரேகை பதிவான நிலையில் ஆட்டக்காய் கிடைத்துள்ளதாக அரிதான ஒன்றாக பார்ப்பதாகவும், கைரேகை நிபுண பரிசோதனை மேற்கொண்டால் ஆட்டக்காய் தயாரிப்பில் ஈடுபட்டது ஆனா பெண்ணா என்பதை அறிய முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.