அதிமுக பொதுச்செயலாளர் இ.பி. எஸ்- பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு- அதிமுக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி*

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி. எஸ்- பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு- அதிமுக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி*

Update: 2025-01-01 11:01 GMT
விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி. எஸ்- பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு- அதிமுக பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி* சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் பாஜகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை சம்பவத்தை கண்டித்து சாட்டையால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தார். இந்நிலையில் விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை விமர்சிக்கும் விதமாகவும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த நோட்டீஸில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது, பொள்ளாச்சி புகழ் கள்ளக் கூட்டணி பயமூட்டி-பொண்ணுங்க படிப்பை நிறுத்த பாக்குது #Save Girls Education தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் மாணவியர் பிரிவு என இடம்பெற்றுள்ளது. விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News