அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்றாத ஊராட்சியை கண்டித்து டைஃபி ஆர்ப்பாட்டம்
மயிலாடு துறை மாவட்டம் இளையாலூர் ஊராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட இளையாளுர் ஊராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வடகரையில் உள்ள இளையாலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் அனீஸ் ரகுமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அறிவழகன் ஒன்றிய செயலாளர் சபீர் அகமது ஒன்றிய பொருளாளர் கபிலன் உள்ளிட்ட பலர் கண்டன கண்டன உரையாற்றினர். இதில் அரங்கக்குடி மதினா தெரு, புலி கண்டமுத்தூர் பாலம் முதல் மில்லத்தூர் மூலக்கரை வரை புதிய தார் சாலை அமைக்க வேண்டும், புது தெருவில் வெள்ள நீர் புகுவதை தடுத்து உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், கொள்ளிடம் கூட்டுகுடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து, சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும், வடிகால் வாய்க்கால்களை மக்கள் பயன்பாட்டிற்காக சீரமைத்துதர வேண்டும், இளையாலூர் தெற்கு தெருவில் பாழடைந்த தண்ணீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.