கிராமத்தில் உயர் கோபுரவிளக்கு திறப்பு விழா
தரங்கம்பாடி அருகே நல்லாடை முக்கூட்டு பகுதியில் உயர் மின் கோபுர விளக்கினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் துவக்கி வைத்தார்;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கொத்தங்குடி ஊராட்சி காரைக்கால் தரங்கம்பாடி ஆடுதுறை செல்லும் முக்கிய சாலையான நல்லாடை முக்கூட்டில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் உயர்மின் கோபுர விளக்கை அமைக்க கோரிக்கை வைத்தனர் . இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.6லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர் மின் கோபுர விளக்கினை அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் தம்பு மோகன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.