வாலாஜாபாத் -- சேர்க்காடு சாலையில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

ழிவுநீர் கால்வாய் அமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-01 14:05 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி 6வது வார்டில், சேர்க்காடு சாலை உள்ளது. இந்த சாலையில், கழிவுநீர் வெளியேற அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கால்வாய், அங்குள்ள காளியம்மன் கோவில் எதிரே விடுபட்டுள்ளது. இதனால், கழிவுநீர் முழுமையாக கால்வாய் வழியாக வெளியேறாமல், அங்குள்ள காலிமனை உள்ளிட்ட பகுதிகளில் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அச்சாலை வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர். மேலும், தொற்றுநோய் ஏற்படக்கூடும் என அப்பகுதி வாசிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீர் கால்வாய் பகுதியில் குப்பை கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாலாஜாபாத் சேர்க்காடு சாலையில், கால்வாய் இல்லாமல் விடுபட்டுள்ள பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News