பரமத்தி வேலூர்யில் டிபன்ஸ் சிலம்பம் பள்ளி மாணவர்கள் மாணவிகள் மாபெரும் சாதனை.
நாமக்கல்லில் ராசிபுரத்தில் சிவம் சிலம்பம் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை நடத்திய மூன்றாவது தேசிய சிலம்ப விளையாட்டுப் போட்டிகள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிவம் சிலம்பம் விளையாட்டு வளர்ச்சி அறக்கட்டளை நடத்திய 3-வது தேசிய சிலம்ப விளையாட்டு போட்டியில் பாரதம் சிலம்பம் அகாடமி சார்பாக 43 பள்ளி மாணவ மாணவிகள் ஒற்றைகம்பு இரட்டை கம்பு, தொடு புள்ளி, மான்கொம்பு, சுருள்வாள். குழுப்போட்டி ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 10தங்கம், 20வெள்ளி 13 வெண்கலம் பரிசுகளை வென்றனர் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த மூத்தஆசான் மத்திய மாநில அரசு விருது பெற்ற S. கிருஷ்ணராஜ் ஆசான் .K.சௌந்தரராஜன் . டிபன்ஸ் சிலம்பம் பயிற்சி வகுப்பு மாஸ்டர் M.சௌந்தர்ராஐன் ஆகியோரை பெற்றோர்கள் பாராட்டினார்கள்