தடாகோவில்-தொழிலாளி உறங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
தடாகோவில்-தொழிலாளி உறங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
தடாகோவில்-தொழிலாளி உறங்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி அருகே உள்ள மொட்டணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி வயது 65. இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,தடா கோவில் பகுதியில் செயல்படும் செந்தூர் மேனுபேக்ச்சரிங் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக கடந்த 3- மாதங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜனவரி 2-ம் தேதி அதிகாலை 5:15 மணியளவில், உறங்கிக் கொண்டிருந்த வீரசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில், வீராசாமியின் மனைவி தனலட்சுமிக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த தனலட்சுமி இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த வீராச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.