தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கிரைம்

Update: 2025-01-02 11:46 GMT
பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை பேராவூரணி காவல்துறையினர் கைது செய்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக, பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பேராவூரணி காவல் ஆய்வாளர் பசுபதி அறிவுறுத்தலின் படி, காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் காவலர்கள் சிவசங்கர், மகேந்திரன் ஆகியோர், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட மணிக்கட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த இப்றாகிம் (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில் அவரிடம் தடை செய்யப்பட்ட ரூபாய் 1,000 மதிப்பிலான 10 லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News