கோவை: குற்றச் சம்பவங்கள் குறைவு - காவல்துறை தகவல் !

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், கொலை மற்றும் சாலை விபத்து சம்பவங்கள் குறைந்துள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை தகவல்.

Update: 2025-01-02 11:46 GMT
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்தில் கொலை மற்றும் சாலை விபத்து சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.கோவை மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், கொலை, கொள்ளை, குட்கா விற்பனை, சாலை விதிமீறல், லாட்டரி விற்பனை, அடிதடி, கஞ்சா விற்பனை, சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம், திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,2023-ம் ஆண்டில் 45-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2024-ம் ஆண்டில் 38 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.2024-ம் ஆண்டில் 2,598 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8% குறைவு. 3,11,214 பேர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.3 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5,392 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.72 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.குட்கா வழக்குகள், லாட்டரி விற்பனை வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் 2024-ம் ஆண்டில் அதிகரித்துள்ளன.

Similar News