கோவை:விபத்து மரணங்கள் கடந்த ஆண்டு விட குறைவு - காவல்துறை தகவல் !
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கொலை மற்றும் விபத்து மரணங்கள் வெகுவாக குறைந்து இருப்பதாக கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் வாகன விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அசோக் குமார் இன்று வலியுறுத்தியுள்ளார்.2024ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடந்த 1,134 சாலை விபத்துகளில் 525 இருசக்கர வாகனங்கள் சிக்கியுள்ளன. இதில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 394 விபத்துகளில் ஹெல்மெட் அணிந்து சென்ற 342 பேர் உயிர் தப்பியுள்ளனர்.ஹெல்மெட் அணிவது போலீசாரைப் பார்த்து அல்ல, தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டு என அசோக் குமார் கூறியுள்ளார். விபத்து ஏற்படும் போது தலையில் ஏற்படும் காயங்கள் தான் பெரும்பாலும் உயிரிழப்புக்கு காரணமாகின்றன.ஹெல்மெட் இதை தடுக்கும்.2023ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024ல் விபத்துக்கள் அதிகரித்திருந்தாலும், ஹெல்மெட் அணிவதால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கோவை மாநகர போலீஸ், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024ம் ஆண்டில் மட்டும் 1,89,243 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ. 8 கோடிக்கும் மேற்பட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.