தக்கலை :   ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஆண்டு விழா துவக்கம்

குமரி

Update: 2025-01-02 11:53 GMT
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு 18 ஆயிரம்  பாடல்களை எழுதியவர் ஞானமாமேதை பீர் முகமது சாகிபு. தென்காசி நகரில் பிறந்து, குமரி மாவட்டம்  தக்கலையில் மறைந்தார்.  ஞானமேதை ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடி கட்டுடன் தொடங்கியது. இந்த விழாவில் அஞ்சுவர்ணம் பீர் முகமதியா அசோசியேஷன் மக்கள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.       விழாவில் 13 ஆம் தேதி வரை தினமும் இரவு மவுலீது ஓதுதல் 6.ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மார்க்க பேருரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்க அறிஞர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 14ஆம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞான புகழ்ச்சி பாடுதல் நடைபெறுகிறது.        15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், 17ஆம் தேதி மூன்றாம் சிராயத் நேர்ச்சை  வழங்குதலும்  நடைபெறுகிறது. தர்கா நிர்வாகம் தற்போது  மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக கல்குளம் தாசில்தாரை தலைவராகக் கொண்டு இயங்கும் விழா குழுவினர் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Similar News