பேராவூரணியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நிகழ்ச்சி

Update: 2025-01-02 12:01 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாலெட்சுமி சதீஸ்குமார் சார்பில், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, ஆனந்தவல்லி ஆற்றுக்கரை ஆட்டோ ஸ்டான்டு, புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டான்டு என இரு இடங்களிலும் 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காய்கறி தொகுப்பு மற்றும் போர்வை என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஆட்டோ சங்கக் காப்பாளர் தென்னங்குடி ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, மாவட்ட இளைஞரணி டாக்டர் ஆர்.சந்திரசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்டோ ஸ்டான்டு, பேருந்து நிலையம், கடைவீதி என மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Similar News