தலை கவச விழிப்புணர்வு பேரணி.

மதுரை மேலூர் தலை கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2025-01-02 12:44 GMT
மதுரை மாவட்டம் மேலூரில் இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் 7-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் சார்பாகவும், மேலூர் காவல்துறை சார்பாகவும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (ஜன.2) நடைபெற்றது. இருசக்கர வாகன பேரணியை மேலூர் டிஎஸ்பி சிவகுமார் மற்றும் போக்குவரத்து காவல்ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், சங்கத்தின் சான்று மற்றும் போஸ்ட் ஆபீஸ் விபத்து காப்பீடு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வம், மாநில பொதுச் செயலாளர் குமாரவேல், மாநில பொருளாளர் ஜமால் முகமது மற்றும் கிளை சங்க நிர்வாகிகள், அருள் ஆட்டோ ஸ்டோர் உரிமையாளர் செந்தில், நெக்ஸ்டன் ஆயில் ஏஜென்ஸிஸ், மேலூர் நண்பர்கள் இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் தலைவர் ரமேஷ், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் கருணாகரன், துணைச்செயலாளர் ரகுவரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News