புளியங்குடி அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்த முருகன் (40) கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு,மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முருகன் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.