கீழப்பாவூர் யூனியனில் மின்கல வண்டிகள் வழங்கல்
யூனியனில் மின்கல வண்டிகள் வழங்கல்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் பகுதி 2ன் கீழ் தூய்மைப்பணிகளை மேற்கொள்வதற்காக கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அரியப்பபுரம் 4, ஆவுடையானூர் 7, குணராமநல்லூர் 2, இடையர்தவணை 2, கல்லூரணி 9, கழுநீர்குளம் 1, குலசேகரப்பட்டி 14, மேலப்பாவூர் 3, பெத்தநாடார்பட்டி 8, பூலாங்குளம் 4, ராஜகோபாலபேரி 3, சிவநாடானூர் 5, திப்பணம்பட்டி 5,வீ.கே. புதூர் 4 என ரூ. 1 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 71 வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வண்டிகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ் தலைமை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ. காவேரி சீனித்துரை தலைமை வகித்து, ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மின்கல வாகனங்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராம. உதயசூரியன், தர்மராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராணி கலைச்செல்வன், சொள்ளமுத்து மருதையா, திரவியக்கனி குணரத்தினம், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், மகேஸ்வரி முருகன், ஐவராஜா, சுபாசக்தி, மகேஸ்வரி பேச்சிமுத்து, துணைத்தலைவர் தங்கசேது, திமுக நிர்வாகி பெரியார் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார்.