தென்காசியில் பொதிகை, நெல்லை, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

பொதிகை, நெல்லை, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம்

Update: 2025-01-02 12:53 GMT
தெற்கு ரயில்வே 56 ரயில்களின் வேகம், நேரத்தை அதிகரித்துள்ளது. இந்த நேரம் மாற்றம் நேற்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதில் 8.40 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு காலை 7.25 மணிக்கு வந்து சேருகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை சந்திப்பில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு வழக்கமாக காலை 7 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வழக்கம்போல் காலை 6.40 மணிக்கு வந்து சேரும்.

Similar News