கன்னியாகுமரியில் ஆசிரியர் வீட்டில் நகை பணம் திருட்டு

வழக்கு பதிவு

Update: 2025-01-02 13:13 GMT
கன்னியாகுமாரி ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் உள்ள சகாய வின்சியூஸ் (55) என்பவர் துபாயில் வேலை பார்த்து, தற்போது ஊரில் உள்ளார்.  இவர் மனைவி இனிதா (49) அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிறிஸ்மஸ் புத்தாண்டு விடுமுறையொட்டி கணவன் மனைவி இரண்டு பேரும் வழுக்கம்பாறையில் உள்ள இனிதாவின் தந்தை வீட்டிற்கு சென்றனர்.       இன்று பள்ளிகள் திறப்பதால் வேலைக்கு செல்வதற்காக இனிதா தனது கணவருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் ஒரு அறையில் இருந்த சுமார் 15 பவுன் . நகை மற்றும் ரூ.  15 ஆயிரம்  திருடப்பட்டு  இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பீரோவில் மற்றொரு ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகைகள் திருட்டு போகாமல் தப்பி உள்ளன.        இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். ஆசிரியை  வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்த வில்லை. இதனால் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News