தேன்கனிக்கோட்டைபேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மஞ்சுநாத், ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் நடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.