சேலம் மாவட்டம் முழுவதும் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. பத்து நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இன்று மூன்றாம் பருவ பாட புத்தங்கள் வழங்கப்பட்டது. சேலம் குகை மூங்கபாடி மாநகராட்சி துவக்கபள்ளியில் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாட புத்தங்கள் வழங்கபட்டது.