பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2025-01-02 14:35 GMT
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் காடச்சநல்லூர் ஊராட்சியில் ரூ.78.00 இலட்சம் மதிப்பீட்டில் மல்லிக்கரை– ஈரோடு சாலை முதல் பாப்பம்பாளையம் வரை தார் சாலை பலப்படுத்தப்பட்டுள்ளதையும், சாலை ஓரத்தில் செடிகள், புதர்கள் நீக்குதல், மழைநீர் மண் அரிப்புகளை சரிசெய்தல், வடிகால் பராமரித்தல், சிறுபாலங்கள் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆலாம்பாளையம் பேரூராட்சி, அன்னை சத்யா நகரில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் இப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, கொக்கராயன்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் வருகை விபரம், அளிக்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதி, மருந்துகளின் இருப்பு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விபரம், இரத்த மாதிரி பரிசோதனை விபரம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விபரம், மேம்படுத்தப்பட்ட அறுவை அரங்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்திருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்கப்படுவது குறித்து கலந்துரையாடினார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களின் உடல்நலன் காத்திட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் தரமாக வழங்கப்பட்டு வருவது மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து, ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கொக்கராயன்பேட்டையில் புதிய நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News