ராஜபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு
ராஜபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மெண்ட்ஸில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரது மனைவி முத்துமாரி வயது 45 என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலை 11 மணியளவில் அவர் பணியாற்றி வரும் கார்மெண்ட்ஸ் கடையை திறந்து வேலை பார்த்து வந்துள்ளார். அது சமயம் ஹெல்மெட் அணிந்தபடி கடைக்குள் புகுந்த மர்ம நபர் தனியாக பணியாற்றி வந்த முத்துமாரி அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து தப்பிவிட முயற்சித்துள்ளார். ஹெல்மெட் அணிந்த நபர் தனது தங்கச்சி செயினை பறிக்க முயற்சிப்பதை அறிந்த முத்துமாரி மர்ம நபருடன் போராடிய நிலையில் கைப்பிடி அளவு செயின் மட்டும் ஹெல்மெட் அணிந்த நபர் கைவசம் சென்று விடவே உடனடியாக சுதாரித்துக் கொண்ட முத்துமாரி கூச்சலிட்டு கத்தியுள்ளார் இதனை அறிந்த மர்ம நபர் கையில் கிடைத்த செயனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து முத்துமாரி கூச்சல் இட்டதை கண்டு அங்கு வந்த பொதுமக்கள் இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது செயின் பருப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மனைவியிடமே ஹெல்மெட் அணிந்தவாரு மரபுணவர் செயின் பிடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதிபொதுமக்களிடமும் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது