கோதை நாச்சியார் கோலத்தில் சுந்தர்ராஜன் பெருமாள் .
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பகல் பத்து மூன்றாம் நாள் அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று (ஜன.2) இத் திருவிழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் திருக்கோலத்தில் வியூக சுந்தர்ராஜன் எழுந்தருளினார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.