மேலகவுண்டம்பட்டி அருகே இளைஞர் குத்தி கொலை.
வேல கவுண்டம்பட்டி அருகே இளைஞரை குத்தி கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,ஜன.2- புத்தாண்டான நேற்று இரவு மது குடித்த மென் பொருள் என்ஜினீயர் சர மாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். பரமத்தி வேலூர் அருகே உள்ள வேலக வுண்டம்பட்டி டாஸ் மார்க் கடையில் நாமக் கல் சிங்கிரிபட்டியைச் சேர்ந்த சஞ்சய் (25). இவர்மென்பொருள்என் ஜினீயராவார். இவர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணி யாற்றி வ்நதார். புத்தாண்டு விடுமுறையை யொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் புத்தாண்டை ஒட்டி நேற்று இரவு 9:30 மணியளவில் டாஸ்மார்க் கடையில் மது குடிக்க சென்றுள்ளார். மது குடித்துவிட்டு வெளியே வந்த போது அடையாளம் தெரியாத கும்பல் திடீரென சஞ்சயை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர் . இரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்ம கும்பல்அங்கிருந்துதப்பி ஓடிவிட்டனர். இதைப் பார்த்த அங்கி ருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சஞ்சையின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சஞ்சயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்ப வத்தால் அந்த பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.