நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் பேட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு அர்ஜுனா விருது!
மத்திய அரசின் TOPS (Target Olympic Podium Scheme)இலக்கு ஒலிம்பிக் போட்டி திட்டம் தமக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது! -பேட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன்
மத்திய அரசால் விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள துளசிமதி முருகேசன் மத்திய மாநில அரசுகள் அளித்த ஊக்கத்தின் காரணமாக விளையாட்டு துறையில் சாதிக்க முடிந்தது என்றும், இந்த விருது அறிவிக்கப்பட்டது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாமக்கல்லில் தெரிவித்தார்.மத்திய அரசின் TOPS (Target Olympic Podium Scheme)இலக்கு ஒலிம்பிக் போட்டி திட்டம் தமக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மூன்றாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படித்து வரும் மாணவி துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் சமீபத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் என்று சாதனை புரிந்தார். இதனையடுத்து இவருக்கு மத்திய அரசு இன்று விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை உள்ளிட்ட மூன்று பேருக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் பேட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... மத்திய அரசு விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை எனக்கு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்றும் இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் மத்திய அரசு இது போன்ற விருதை தமக்கு அறிவிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்காத நேரத்தில் இது போன்ற விருதை அறிவித்துள்ளது நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். மத்திய மாநில அரசு சார்பில் விளையாட்டு துறையில் சாதனை புரிய பல்வேறு ஊக்கம் அளித்து வந்ததால் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றி பெற்று சாதனை படைக்க முடிந்தது என்றும், இந்த இந்த விருது கிடைத்தது குறித்து முருகேசன் தமது பெற்றோர் இடம் மகிழ்ச்சிகரமாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பரிசு ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிலேயே பாரா பேட்மின்டன் நிறைவு போட்டிக்கு சென்ற சென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.பெரிய வீராங்கனைகள் பெறுகின்ற அர்ஜுனா விருது இன்று தனக்கு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சி தருகிறது. எங்கள் பெற்றோர் குடும்பத்தினரிடம் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சிறுவயதில் இருந்து இதுபோன்ற சாதனைகள் செய்ய முடியுமா என ஏங்கி இருந்த எனக்கு தற்போது அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகின்ற புத்தாண்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு மிகவும் உறுதுணையாக இருந்தது. மத்திய அரசின் TOPS (Target Olympic Podium Scheme) திட்டத்தில், என்னை தேர்ந்தெடுத்து, அனைத்து விதமான பயிற்சிகள் சர்வதேச போட்டியில் பங்கேற்க செலவுகள் ஆகியவற்றை வழங்கியது. மாதந்தோறும் விளையாட்டு உதவித்தொகை, ஊட்டச்சத்து உணவுகள் போன்றவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒரு விளையாட்டு வீரரை சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேவையான அனைத்து வகைகளையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அதேபோல மாநில அரசு விளையாட்டு துறை மற்றும் துணை முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இது போன்ற மத்திய மாநில அரசுகளின் உதவியால் போட்டிகளில் பங்கேற்க முடிந்தது என்றும் மாணவி துளசிமதி முருகேசன் தெரிவித்தார்.மேலும் மாணவி துளசிமதி முருகேசனுக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், நாமக்கல் பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....