ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்.
அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். புத்தாண்டு தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அதிகாலை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.