கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்ற அணிக்கு பரிசு.
திரளாக விளையாட்டு போட்டியாளர்கள் பங்கேற்பு.
ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. செயற்றைவென்றான் கிரிக்கெட் கிளப் (இஇஇ) சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசாக ரூ.11,111-யை அனக்கவூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சி.துரையும், இரண்டாவது பரிசு ஊராட்சி மன்றத் தலைவா் சசிகலா கோவிந்தசாமி ரூ.7500-ம், மூன்றாவது பரிசு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவா ரூ.4,500 என வழங்கினா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வே.வே.குணசீலன், அதிமுக ஒன்றியச் செயலா் எம். அரங்கநாதன், வழக்குரைஞா் முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் குணசேகரன், சங்கா், தூசி வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.