கோணமூலை ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

கோணமூலை ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு

Update: 2025-01-03 08:01 GMT
கோணமூலை ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோண மூலை ஊராட்சி நஞ்சப்பகவுண்டன்புதூரில் ரூ.30 லட்சத்து 10 ஆயிரத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இதன் திறப்பு விழா நேற்று காலை நடை பெற்றது. விழாவுக்கு சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல் வகாப், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. ஆ இளங்கோ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் புதிய அலுவலகத்தில் இதி குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதில் உதவி பொறியாளர் விஜயராகவன், ஊராட்சி உறுப்பினர்கள் ராதா, ஜனளி, முருகாயாகள்,மாரிமுத்து, தாமரைச்செல்வன், ஊராட்சிசெயலாளர் அருண்குமார், தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செய லாளர் அசோகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள், பொது மக்கள் தி.முகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News