விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது;
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதைத் தொடர்ந்து மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கினைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ,வாசுகி, டி.கே. ரங்கராஜன், எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், எம் எல்ஏக்கள் நாகை மாலி , சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலத் தலைவா்கள், மாநிலக் குழு உறுப்பினா்கள், மாவட்டங்களிலிருந்து கட்சியினர் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மாநாட்டு அமர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.