மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை தொடக்கி வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூர் சிறப்பங்காடி அமராவதி}2 கடையில், மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனையை சனிக்கிழமை தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.;
அரியலூர்,ஜன. 4- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவு பொங்கல் என்ற மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. இதற்காக அரியலூரில், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிறு சிறப்பங்காடி அமராவதி}2 கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், நுகர்வோருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கி விற்பனை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்காக கூட்டுறவுத் துறையின் சார்பில் “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் நியாய விலைக்கடைகளில் சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பானது இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு மற்றும் பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக விற்பனை செய்யப்படுகிறது. இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி (பிபிடி43) 500 கிராம், பாகுவெல்லம் 500 கிராம், ஏலக்காய் } 5 கிராம், முந்திரி }50 கிராம், ஆவின் நெய் }50 கிராம், பாசிபருப்பு } 100 கிராம், உலர் திராட்சை }50 கிராம் என 7 பொருள்கள் அடங்கிய சிறிய பையுடன் ரூ.199 என்ற விலையிலும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பில், மஞ்சள் தூள்}50 கிராம், சர்க்கரை } 500 கிராம், துவரம் பருப்பு }250 கிராம், கடலைப் பருப்பு} 100 கிராம், பாசிப் பருப்பு}100 கிராம், உளுத்தம் பருப்பு} 250 கிராம், கூட்டுறவு உப்பு } 1கிலோ, நீட்டு மிளகாய்} 250 கிராம், தனியா }250 கிராம். புளி} 250 கிராம், பொட்டுக் கடலை} 200 கிராம், மிளகாய் தூள்} 50 கிராம், செக்கு கடலை எண்ணெய் 1/2 லிட்டர், கடுகு} 100 கிராம், சீரகம்} 50 கிராம், மிளகு} 25 கிராம், வெந்தயம்}100 கிராம், சோம்பு} 50 கிராம், பெருங்காயம் }25 கிராம் என 19 பொருள்கள் அடங்கிய 1 மளிகை பையுடன் }499/} என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெரும் பொங்கல் தொகுப்பில், மஞ்சள் தூள்}50 கிராம், சர்க்கரை } 500 கிராம். கூட்டுறவு உப்பு} 1 கிலோ, துவரம் பருப்பு }250 கிராம். உளுத்தம் பருப்பு }250 கிராம், கடலைப் பருப்பு} 200 கிராம், பச்சைப் பட்டாணி} 100 கிராம், பாசிப் பருப்பு(சிறுபருப்பு) }250 கிராம், வெள்ளை சுண்டல் }200 கிராம், வேர்க்கடலை} 200 கிராம், பொட்டுக்கடலை }200 கிராம், வரமிளகாய் }250 கிராம், புளி} 200 கிராம், தனியா }250 கிராம், கடுகு }100 கிராம், மிளகு }50 கிராம், சீரகம் } 50 கிராம், வெந்தயம் }100 கிராம, சோம்பு }50 கிராம், ஏலக்காய் }5 கிராம், செக்கு கடலை எண்ணெய் } 1/2 லிட்டர், வரகு} 500 கிராம், சாமை} 500 கிராம், திணை} 500 கிராம், ரவை } 500 கிராம், அவல் } 250 கிராம், ராகிமாவு }500 கிராம், கோதுமை மாவு } 500 கிராம், ஜவ்வரிசி }200 கிராம், வறுத்த சேமியா }170 கிராம், மல்லி தூள் }50 கிராம், சாம்பார் தூள்}50 கிராம், மிளகாய் தூள் }50 கிராம், பெருங்களயத் தூள்} 25 கிராம் என 34 பொருள்கள் அடங்கிய 1 பெரியமளிகை பையுடன் ரூ.999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் 500 கிராம் நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் பொங்கல் மளிகை தொகுப்புகளை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக பொங்கல் பண்டியைகை கொண்டாடி மகிழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், வட்டாட்சியர் முத்துலட்சுமி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சாய்நந்தினி, அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.