ஓவிய போட்டியை ஆட்சியர் பார்வையிட்டார்
ஓவிய போட்டியை ஆட்சியர் பார்வையிட்டார்;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு - பண்பாடும் பெருமிதங்களும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என தனித்தனியே 3 பிரிவுகளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தையொட்டி தமிழரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு - பண்பாடும் பெருமிதங்களும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்றன. அதில் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 365 பள்ளி மாணவர்கள், 46 கல்லூரி மாணவர்கள், 48 பொதுமக்கள் என மொத்தம் 459 நபர்களும், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 424 பள்ளி மாணவர்கள், 64 கல்லூரி மாணவர்கள், 41 பொதுமக்கள் என மொத்தம் 529 நபர்களும், என ஆக மொத்தம் 988 பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். அதன்படி, அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்.