ஜெயங்கொண்டம் தாவூத் பிவி ஜும்மா பள்ளிவாசல் புதிய பொதுக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
ஜெயங்கொண்டம் தாவூத் பிவி ஜும்மா பள்ளிவாசல் புதிய பொதுக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.
அரியலூர், ஜன.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 8 வார்டு ஜூப்ளி ரோடுடில் உள்ள இஸ்லாமியர்களின் தாவூத் பிவி ஜும்மா பள்ளிவாசல் சுமார் 100 ஆண்டுக்கு மேலாக இருந்து வருகிறது. இதில் தலைவராக pmsp முகமது ஷரீப், மற்றும் செயலாளராக A சர்புதீன், பொருளாளராக MH கமாலுதீன், துணைத் தலைவராக M அன்வர் பாட்சா, துணை செயலாளராக A ஜான் பாட்சா, ஆகியோர் கொண்ட பொதுக்குழு மூலம் ஒருமனதாக நிர்வாக கமிட்டி உறுப்பினர்களை, நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாப் MK அப்துல் சலாம், ஜனாப் B சவுசாத், ஜனாப் N இதயத்துல்லா, ஜனாப் J முஸ்தபா, ஜனாப் பக்கிரி முகமது, ஜனாப் K இதயத்துல்லா, ஜனாப் A கலிபுல்லா, ஜனாப் K ஜமால் ஆகியோர் பொதுக்குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பொதுக்குழுவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.