மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு

பென்னாகரம் அருகே பி அக்ரஹாரம் அரசு பள்ளியில் காலால் எட்டி உதைத்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு

Update: 2025-01-05 02:14 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பென்னாகரம் பகுதி சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார் இவர் கடந்த 2ஆம் தேதி ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சென்றபோது மாணவர்களிடம் அரையாண்டு விடைத்தாள்களை வழங்கியுள்ளார்.அப்போது மாணவன் ஒருவனை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனால் மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இது குறித்து மாணவனின் பெற்றோர் நேற்று ஜனவரி 4 பென்னகரம் காவல் நிலையத்தில் ஆசிரியர் வெற்றிவேல் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து பென்னாகரம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News