குமரி மாவட்டத்தில் முக்கிய ஆறுகளில் ஒன்று பழையாறு. இந்த ஆறு சுருளோட்டில் இருந்து தொடங்கி மணக்குடி வரை 35 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ளது. இதன் மூலம் பல்வேறு வயல் பரப்புகள் பாசன வயிறு வசதி பெற்று வருகிறது. உள்ளாட்சி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பழையறு விளங்கி வருகிறது. மேலும் புனிதத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. நாகர்கோவில் உள்ள முக்கிய கோயில்களில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் ஆறாட்டு நடத்த பழையாற்று தண்ணீர் தான் பயன்படுத்துவது வழக்கம். இதனால் பழைய ஆற்றில் ஆறாட்டுதுறை என்ற இடமும் உள்ளது. தற்போதும் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் கோயில்களில் இருந்து பழைய ஆற்றில் ஆராட்டு செல்லும் சாலையை ஆராட்டு சாலை என்று தான் அழைக்கிறார்கள். இந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் படித்துறைகள் இடிந்து சேதமாகி புதர் மண்டி கிடக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் குடிமகன்களின் அட்டகாசத்தால் மது பாட்டில்கள் குவியலாக கிடக்கிறது. படித்துறை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.