சூலூர்: நாட்டு மாடுகள் கண்காட்சி !
தனியார் பொரியல் கல்லூரியில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் நாட்டு மாடு கண்காட்சி நடைபெற்றது.
கோவை எல்அண்ட்டி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளான் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள் கண்காட்சியில் பங்கேற்றன. மாணவர்கள், குழந்தைகள் என பலரும் இந்நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வில், நாட்டு மாடுகள், காளை மற்றும் நாய் கண்காட்சிகள், சிறந்த எருமை, சிறந்த காங்கேயம் காளை போட்டிகள், சண்டை சேவல் கண்காட்சி, ரேக்லா ரேஸ் மற்றும் குதிரை பந்தயம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சீலன் கூறுகையில், நாட்டு காளைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. காங்கேயம் காளைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இன காளைகள், பல்வேறு ஆட்டு இனங்கள் மற்றும் நாட்டு நாய்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் இந்நிகழ்ச்சியை மிகவும் விரும்பி பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.