சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்குமரியில் விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை பார்வையிட வசதியாக ரூபாய் 37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் கட்டப்பட்டு, கடந்த 30 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் கடல் சீற்றம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக படகு சேவை நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் கடல் சீற்றம் குறைந்த தையடுத்து, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடங்கியது. இந்த நிலையில் கண்ணாடி பாலத்தில் நடந்த செல்ல சுற்றுலா பயணிகள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் கண்ணாடி பயணம் வழியாக நடந்து திருவள்ளூர் சிலைக்கு சென்றனர். நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டு கண்ணாடி பாலத்தை ரசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.