புஞ்சை புளியம்பட்டியில் காந்தி கல்லூரி மாணவர்கள் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

புஞ்சை புளியம்பட்டியில் காந்தி கல்லூரி மாணவர்கள் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

Update: 2025-01-05 04:01 GMT
புஞ்சை புளியம்பட்டியில் காந்தி கல்லூரி மாணவர்கள் மைம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விண்ணப்பள்ளியில் அமைந்துள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி, காந்தி நாட்டு நலப்பணி திட்டம், போதைப் பொருள் தடுப்புக் குழு மற்றும் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துறை இணைந்து நடத்தும் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.காந்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சக்திவேல் அவர்கள் தலைமை தாங்கினார்.நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் கெளசல்யா மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் வெங்கட்ராமன் ஆகியோர் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகத்தின் செயலாளர் ஜி.எஸ் சிராஜுதீன் மற்றும் இயக்குனர் ஏ.சி கார்த்தி அரசு, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், புஞ்சை புளியம்பட்டி காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம், புஞ்சை புளியம்பட்டி நில வருவாய் ஆய்வாளர் ரகுநாதன்,விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் கமல், புளியம்பட்டி காவல் நிலையம் எஸ்ஐ கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் காந்தி நுண்கலை மன்ற மாணவிகள் போதை பழக்கத்தில் ஏற்படும் விளைவுகளை பற்றி புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையத்திற்கு முன்பு நாடகமாக நடித்துக் காட்டினார். இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Similar News