இருசக்கர வாகனம் மீது இரண்டு வேன்கள் மோதி கூலி தொழிலாளி பரிதாப பலி

ஆரணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது இரண்டு வேன்கள் மோதியதில் செங்கல் சூளை கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2025-01-05 04:45 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது இரண்டு வேன்கள் மோதியதில் செங்கல் சூளை கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே விபத்து மோட்டார் சைக்கிள் மீது 2 வேன்கள் மோதியதில் செங்கல் சூளை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளை யில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திரா நகரத்தை சேர்ந்த மாயக்கண்ணன் 30 வயது திருமணமான இவருக்கு லைலா என்ற மனைவியும் அரிகிருஷ்ணன் என்ற குழந்தையும் உள்ளனர் ஆரணியில் உள்ள ஓட்டலில் மோட்டார் சைக்கிளில் சென்று உணவு அருந்திவிட்டு செங்கல் சூளைக்கு திரும்பி வந்த போது புதுவாயல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி காய்கறி மார்க்கெட் அருகே எதிரே வந்த பிஸ்கட் விற்பனை செய்யும் வேன் ஒன்று வலது புறம் திடீரென திரும்பி டீக்கடைக்கு சென்றது இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் பிஸ்கட் விற்பனை செய்யும் மேன்மீது மோதியது மேலும் அந்த வேனுக்கு பின்னால் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேனும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்த மாயக்கண்ணன் துடிதுடித்து உயிர் இழந்தார். அவரை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மாயக்கண்ணன் உடலை அனுப்பி வைத்து விபத்து குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News