காங்கேயத்தில் சட்டவிரவுமாக மது,ரேஷன் அரிசி விற்பனை விடுதலைச் சிறுத்தை கட்சியினர் குற்றச்சாட்டு

காங்கேயம் பகுதியில் சட்டவிரவுமாக மது,ரேஷன் அரிசி விற்பனை விடுதலைச் சிறுத்தை கட்சியினர் குற்றச்சாட்டு

Update: 2025-01-05 04:54 GMT
காங்கேயம் பகுதியில் சட்டவிரோதமாக மது மற்றும் ரேஷன் அரிசி விற்பனை நடைபெறுவதாக அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காங்கேயம் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது, காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் முறைகேடாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் ஏழை கூலி தொழிலாளர்கள் அதிகாலை முதலை குடித்துவிட்டு குடும்பத்திற்கு பெரும் சிரமத்தையும், பொருளாதாரத்தையும் அழித்துவிடும் சூழ்நிலையும் சந்தித்து வருகின்றனர்.எனவே சட்ட விரோதமாக அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் திருட்டுத்தனமாக கூடுதல் நேரங்களில் மது விற்பனை செய்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் ரேஷன் அரிசிகளை வாகனங்களில் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மது விற்பனை செய்பவர்களையும் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்பவர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிடித்துக் கொடுக்கும் அறவழிப் போராட்டமும் முன்னெடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர்களும் மனு அழிக்கப்பட்டது. இந்த மனு வழங்கும் நிகழ்வின்போது காங்கேயம் நகர செயலாளர் திருமா செந்தில்குமார், நகர துணை செயலாளர் தனபால், நகர பொருளாளர் வேதமுத்து, செயற்குழு உறுப்பினர் அமுத அரசன், பாலு உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Similar News