சென்னை பிரபல உணவகத்தில் வாங்கிய சிக்கன்....தலையை நீட்டிய புழுக்கள்!
சென்னை பிரபல உணவகத்தில் வாங்கிய சிக்கன்....தலையை நீட்டிய புழுக்கள்!
போரூர், அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு ஆன்லைன் மூலம் அய்யப்பந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த டெலிவரி ஊழியர் கார்த்திகேயனிடம் உணவு பார்சலை கொடுத்துவிட்டு சென்றார். பார்சலை பிரித்த போது அதில் உள்ள சிக்கனில் இருந்து புழுக்கள் ஒவ்வொன்றாக நெளிந்து வெளியே வந்தது. இதனை கண்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார். இதனை உடனடியாக வீடியோவாக பதிவு செய்த அவர் உணவகத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் கூறினார். ஆனால் ஊழியர்கள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் கார்த்திகேயனுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உணவத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கார்த்திகேயன் தேசிய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.