அறந்தாங்கி, முகமது ரிஸ்வான் என்பவர் அவருடைய காரில் முகமது ரியாஸ், அஷ்ரப், முகமது ஹரிஷ், ஆகிய மூவரை ஏற்றிக் கொண்டு ஜன.04 இரவு 10:30க்கு திருச்சிக்கு சென்றுள்ளனர். கீழையூரில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் பயணிகள் 3 பேரும் காயமடைந்து புதுகை அரசு மருத்துவமனையிலும், கார் ஓட்டுநர் முகமது ரிஸ்வான் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரிக்கின்றனர்.