மலர்களால் அலங்காரிக்கப்பட்ட நடராஜர் நடன தீபாராதனை!
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மலர்களால் அலங்காரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் நடன தீபாராதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மலர்களால் அலங்காரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் நடன தீபாராதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் மார்கழி மாதம் சிவாலயங்களில் திருவாதிரை விழா வெகு சிறப்பாக நடைபெறும் திருவாதிரை திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நடைபெறும் அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனூரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக இன்று நடராஜர் சன்னிதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது இதைத் தொடர்ந்து நடன தீபாராதனை நடைபெற்றது இதைத்தொடர்ந்து பல்வேறு விதமான சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.