அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் ஓட்டி வந்த மாருதி காரும், திருநெல்வேலியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (36) ஓட்டி வந்த இன்னோவா காரும், நேற்று 12:15 மணிக்கு ஆதனக்கோட்டை (கவி பாலம்) பாலத்தில் மோதிக்கொண்டன. அதில் மகேந்திரன் காயமடைந்து கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.